top of page
67b1e275-ef9b-4c35-8728-bfb1d2cb5c9b.png
ea1ae9cb-7c4d-4845-9490-cd13eaf4f1f7.png
இந்திய திருநாட்டின் சுதந்திர தின கொண்டாட்டம். – சேவையால் உயர்வோம்

இந்திய திருநாட்டின் எண்பதாவது சுதந்திர தினத்தை கோவை அன்னதான அறக்கட்டளையானது பெருமையுடனும், நன்றியுடனும் கொண்டாடும் இந்த இனிய வேளையில், அது நமக்குக் கற்றுத்தந்த கடமையையும் சமூகப் பொறுப்பையும் மீண்டும் உணர வேண்டிய தருணம் இது என்றே நினைக்கிறோம். நம் முன்னோர்கள் தமது இன்னுயிரையும் தியாகம் செய்து பெற்ற இந்த சுதந்திரதின கொண்டாட்டமானது தேசியக் கொடியேற்றி வெறும் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்வதில் மட்டும் நிறைவடையாது; அது சமூகத்தின் ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும் நம்பிக்கையையும் நலனையும் கொண்டு சேர்க்கும்போதுதான் முழுமை பெறுகிறது.

இன்றும் நம் சமூகத்தின் அடித்தட்டு மக்களில் பலர், பசிப்பிணியுடன் போராடிக் கொண்டிருக்கின்றனர். பல குழந்தைகள், கல்வி வாய்ப்பை இழந்த நிலையிலும், முதியவர்கள் போதிய மருத்துவ உதவியின்றி வாழும் சூழலிலும் இருக்கின்றனர். அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றும் பொறுப்பு, நம் ஒவ்வொருவருக்கும் உண்டு.

அந்த உயரிய நோக்கத்தோடு, கோவை அன்னதான அறக்கட்டளை, அன்னதானம் மூலம் பசியைப் போக்குவதோடு மட்டுமல்லாமல், இலக்கிழந்த குழந்தைகளின் கல்விக்கு துணையாகவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய முதியோரின் மருத்துவ உதவிக்கும், தனது சேவையை அர்ப்பணித்து வருகிறது.

இந்த சுதந்திர தினத்தில், நாம் செய்துக்கொண்டிருக்கும் இந்த சேவையின் நோக்கத்தை மேலும் பல நல்லுள்ளங்களுக்கும் கொண்டு சென்று ஏழைகளின் வாழ்வில் ஒளிசேர்க்க ஒரு வாய்ப்பினை தந்து கோவை அன்னதான அறக்கட்டளையின் கரங்களை மேலும் வலுப்படுத்துவோம்.. நம்மால் இயன்ற உதவியை பகிர்வோம். ஒரு வேளை உணவு, ஒரு குழந்தையின் கல்வி, ஒரு முதியவரின் மருத்துவ உதவி – இவை அனைத்தும் நாட்டை வலுப்படுத்தும் உண்மையான தேசப்பற்றின் வெளிப்பாடுகளாகும்.

சுதந்திரம் என்பது உரிமை மட்டுமல்ல! சமூகத்தின் கடைசி மனிதனின் முகத்தில் புன்னகையை மலரச் செய்யும் பொறுப்பும் கூட. அந்தப் பொறுப்பை ஏற்று, சேவையால் சமுதாயத்தை உயர்த்தும் பயணத்தில் அனைவரும் இணைவோம்.

ஜெய் ஹிந்த்!

bottom of page